ஏ.வி.பி., பள்ளியில் பள்ளி நிறுவனர் தினம்
திருப்பூர்: ஏ.வி.பி. பள்ளியில் அதன் நிறுவனர் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., டிரஸ்ட் நேஷனல் மெட்ரிக் பள்ளி வளாகத்தில், பள்ளி நிறுவனர் அருள்ஜோதியின், 20வது ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அவரது சிலைக்கு பள்ளி தாளாளர் கார்த்திகேயன், பள்ளி முதல்வர் பிரியாராஜா, ஒருங்கிணைப்பாளர் அபிதாபானு, மேலாளர் ராமசாமி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.நிகழ்ச்சியில், பள்ளி மேலாளர் ராமசாமி, மாணவியர் கரிஷ்மா, சஞ்சனா ஆகியோர் நிறுவனர் அருள்ஜோதி குறித்து பேசினர். தொடர்ந்து, மாணவர்கள் தங்கள் கடமைகள் குறித்து உறுதிமொழி ஏற்றனர்.