போக்குவரத்து விதிமுறை அறிய பள்ளி மாணவர்கள் களப்பயணம்
உடுமலை; கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா கல்வி நிறுவன மாணவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை அறிய களப்பயணம் சென்றனர்.கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா கல்வி நிறுவனத்தின், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரைஉள்ள மாணவர்கள், கோவையிலுள்ள 'டிராபிக் பார்க்' பகுதிக்கு களப்பயணம் அழைத்து செல்லப்பட்டனர்.மாணவர்கள் அதன்மூலம் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விளக்கம் கேட்டறிந்தனர். தொடர்ந்து விளையாட்டு திடலில் விளையாடி மகிழ்ந்தனர்.