மேலும் செய்திகள்
சென்சுரி பள்ளி மாணவர்கள் ஹாக்கியில் அசத்தல்
09-Oct-2025
உடுமலை; இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமத்தின் சார்பில், கோவை மண்டல அளவிலான ஹாக்கி அணிக்கான வீரர்கள் தேர்வு குன்னுாரில் நடந்தது. இதில், கோவை மண்டல அளவில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இளையோர் பிரிவில், ராஜேஸ், தீனா ஆகியோரும், மூத்தோர் பிரிவில் கவுதம், மிக மூத்தோர் பிரிவில், யோகேஸ்வரன், திவாகர், பொன்ராஜ் ஆகியோர் மண்டல அளவிலான ஹாக்கி அணியில் விளையாட தேர்வு பெற்றனர். இம்மாணவர்கள், சிவகங்கை, அரியலுார், விழுப்புரம் ஆகிய இடங்களில் நடைபெறும் மாநில தேர்வு போட்டியில் பங்கேற்று விளையாட உள்ளனர். இம்மாணவர்களை, பள்ளி தலைமையாசிரியர் பாபு, உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமாரவேல், பள்ளி மேலாண்மை குழுவினர், ஆசிரியர்கள் பாராட்டினர்.
09-Oct-2025