உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சேப்டி இல்லாமல் செல்பி ஆர்வம் அமராவதியில் நடவடிக்கை தேவை

சேப்டி இல்லாமல் செல்பி ஆர்வம் அமராவதியில் நடவடிக்கை தேவை

உடுமலை: அணை நிரம்பி வழியும் போது, அப்பகுதியில், அத்துமீறும்சுற்றுலா பயணியரை கண்காணித்து பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், அமைந்துள்ள அமராவதி அணை, சுற்றுலா தலமாக உள்ளது.பல்வேறு பகுதிகளில் இருந்து வரும், சுற்றுலா பயணியர், அணையின் மதகு பகுதிக்கும், நீர் தேக்கத்துக்கும் சென்று, 'செல்பி' எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர்.குறிப்பாக, அணை நிரம்பி வழியும் போது, மேல் மதகு, பிரதான கால்வாய் ஷட்டர், ஆற்று பாலம் உள்ளிட்ட இடங்களை ரசிக்க சுற்றுப்பகுதியை சேர்ந்தவர்களும், அமராவதி அணைப்பகுதியில், குவிகின்றனர்.இதில், சிலர், கல்லாபுரம் ரோட்டிலுள்ள பாலத்திலேயே நின்று அணையின் அழகை ரசிக்கின்றனர். ஆனால், பலர் அத்துமீறி, அணை மதகு, கீழ் ஷட்டர், தடுப்பு சுவர் ஆகிய பகுதிகளுக்கு, 'செல்பி' எடுக்க செல்கின்றனர்.இத்தகைய விபரீத முயற்சிகளால், உயிரிழப்புகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. அணையில் இவ்வாறு அத்துமீறி சென்று உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகும், விழிப்புணர்வு இல்லாமல், இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுப்பணித்துறையினர் அணைப்பகுதியில், கண்காணிப்புக்கு, பணியாளர்கள் நியமித்து, அத்துமீறல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை