உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கழிப்பிடம் அருகே காய்கறி விற்பனை; வாரச்சந்தையில் இப்படியும் அவலம்

கழிப்பிடம் அருகே காய்கறி விற்பனை; வாரச்சந்தையில் இப்படியும் அவலம்

பல்லடம் ; பல்லடம், என்.ஜி.ஆர்., ரோட்டில், வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாட்களில் நடக்கும் சந்தைக்கு என, தினசரி மார்க்கெட் அருகே பிரத்யேக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சந்தையில் கடை அமைக்க போதிய இடம் இன்றி, வியாபாரிகள் பலர், சந்தை வளாகத்தில் நடைபாதியிலேயே கடை அமைத்து விற்பனையில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு, போதிய இடம் இன்றி கழிப்பிடம் அருகிலும் காய்கறி விற்பனையில் ஈடுபடுகின்றனர். நடைபாதையில் மேற்கூரை இல்லாததால், மழை காலங்களில், வியாபாரம் செய்வதில் இடையூறு ஏற்படுகிறது.ஒரு நாள் வியாபாரத்தை நம்பி வரும் வியாபாரிகள் பலர் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், இங்குள்ள கழிப்பிடம் போதிய பராமரிப்பு இன்றி, மோசமான நிலையில் உள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் வாரச்சந்தையில், சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, கூடுதல் கடைகளை அமைத்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், பொதுமக்கள் இடையூறு இன்றி வந்து செல்லவும் உண்டான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை