உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாலியல் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு

பாலியல் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு

உடுமலை: பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, கல்வித்துறையினர் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியிருந்தனர்.அவ்வகையில், உடுமலை அருகே பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாலியல் மற்றும் பெண் குழந்தைகள் நலனுக்கு எதிரான வன்முறைகள் குறித்து, விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார். ஆசிரியர் ரேணுகாதேவி வரவேற்றார். ஆசிரியர் சுபத்ரா, பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்தும், பாலியல் கொடுமைகள் தடுப்பு வழிமுறைகள் குறித்தும் விளக்கமளித்தார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. தமிழாசிரியர் சரவணன் நன்றி தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை