உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆடுகளை வேட்டையாடும் நாய்கள்; கால்நடை வளர்ப்போர் சோகம்

ஆடுகளை வேட்டையாடும் நாய்கள்; கால்நடை வளர்ப்போர் சோகம்

காங்கயம்; கடந்த இரு ஆண்டுகளாக தெரு நாய்களால் தாக்கப்பட்டு, ஆடுகள் பலியாகும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.பாதிக்கப்பட்ட விவசாயிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று, இறக்கும் ஆடுகளுக்கு அரசு இழப்பீடும் வழங்கி வருகிறது. இருப்பினும், காங்கயம், வெள்ளகோவில் உள்ளிட்ட இடங்களில், தெரு நாய்களால் ஆடுகள் பலியாவது தொடர்கிறது.நேற்று, காங்கயம் வட்டம், வீரணம்பாளையம் பஞ்சாயத்து, பகவதிபாளையம் நால் ரோட்டில், பொன்னுசாமி என்பவரது பட்டியில் புகுந்த நாய், நான்கு ஆட்டுக்குட்டிகளை கடித்தது.இவ்வாறு, ஆங்காங்கே தெரு நாய்களால் கடிபட்டு காயமடையும் மற்றும் இறக்கும் ஆடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.'தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வது மட்டுமே, இப்பிரச்னைக்கு தீர்வு' என, அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், நாய்களின் தொல்லை அதிகமாக உள்ள இடங்களிலாவது, அவரச, அவசியம் கருதி, அவற்றுக்கு அறுவை சிகிச்சை செய்து, இனப்பெருக்கத்தை கட் டுப்படுத்த வேண்டும் என, கால்நடை வளர்ப்போர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி