சிவாநிகேதன் சி.பி.எஸ்.இ., பள்ளி 10, பிளஸ் 2 தேர்வில் அபாரம்
திருப்பூர்: திருப்பூர், மங்கலம் சாலையில் உள்ள சிவாநிகேதன் சி.பி.எஸ்.இ., பள்ளி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளது.பத்தாம் வகுப்பு மாணவன் குஷல் விஜய் ஷா அறிவியல் மற்றும் கணிதப்பாடத்தில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளதோடு, 500க்கு 494 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.விதர்சனா 489 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம்; திவ்யதர்ஷினி 487 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பெற்றனர். மாணவி அபிநந்தனா தமிழில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றார்.பிளஸ் 2 வகுப்பில் மாணவி பாலமித்ரா 500க்கு 482 மதிப்பெண் பெற்று முதல் இடம்; அக் ஷத் சிங்வி 481 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம்; ஜானவி 477 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம்பெற்றனர். சஞ்சித் கணக்கியல் பாடத்தில் நுாறுக்கு நுாறு மதிப்பெண் பெற்றார். சாதித்த மாணவ, மாணவி களை பள்ளி தாளாளர்கள் அமிர்தா பிரபாகரன், கிருபா ெஷட்டி, முதல்வர் கங்கா மோகன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.