உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குறுகிய கால ரக விதை நெல் இருப்பு

குறுகிய கால ரக விதை நெல் இருப்பு

உடுமலை: அமராவதி ஆயக்கட்டு பாசன பகுதிகளில் நெல் சாகுபடி துவங்கியுள்ள நிலையில், வேளாண் துறையால், மானிய விலையில் விதை நெல் வினியோகம் செய்யப்படுகிறது. மடத்துக்குளம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது : அமராவதி ஆயக்கட்டு பாசன பகுதிகளில், நெல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு, குறுகிய கால ரகமான, கோ–51 ரக விதை நெல் தேவையான அளவு இருப்பு உள்ளது. மானிய விலையில் விதை நெல் மட்டுமின்றி, ரசாயண உர பயன்பாட்டினை குறைக்கும் வகையில், அனைத்து வகை நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்டீரியா, பொட்டாஷ் பேக்டீரியா, துத்தநாக பேக்டீரியா, ரைசோபியம், அசோபாஸ் போன்ற நுண்ணுயிர் உரங்கள் தேவையான அளவு இருப்பு உள்ளது. இவ்வாறு, தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை