உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை

ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை

உடுமலை : கணியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும்.மடத்துக்குளம் தாலுகா, கணியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, சுற்றுப்புற கிராமங்களிலிருந்து, தினமும், 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகின்றனர். மேலும், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், போதிய டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால், பொதுமக்கள் பாதித்து வருகின்றனர்.கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, 3 டாக்டர்கள் ஒதுக்கீடு உள்ள நிலையில், ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். அதே போல், 3 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர்.இதனால், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் மக்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும்.சுற்றுப்புற கிராமங்களுக்கு, மருத்துவ சிகிச்சைக்கு ஆதாரமாக உள்ள, ஆரம்ப சுகாதார நிலையத்தை முதன்மை சுகாதார நிலையமாக தரம் உயர்த்தி, உரிய மருத்துவ வசதிகள், கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை