மேலும் செய்திகள்
ஸ்கூட்டர் வழங்க பயனாளி தேர்வு முகாம்
04-Sep-2024
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், சர்வதேச காதுகேளாதோர் தினம் மற்றும் தேசிய சைகை மொழி தின நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்து, விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்கள் உள்பட 110 பேர் பங்கேற்று, 'சைகை மொழி அனைவரும் எளிதாக கற்கலாம்', 'சைகை மொழி கற்பதால் நட்பு புத்துணர்ச்சி பெறும்' என்கிற வாசகங்கள் பொறித்த பதாகைகள் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.கலெக்டர் அலுவலக வளாகம் முதல் தென்னம்பாளையம் வரை ஊர்வலமாக சென்று திரும்பினர். செவித்திறன் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த் ராம்குமார், காதுகேளாதோர் சங்க செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 'ஸ்கூட்டர்' வழங்கல்
எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், மாற்றுத்திறனாளிகள் 18 பேருக்கு தலா 96,011 ரூபாய் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., செல்வராஜ், பயனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கினார். மேயர் தினேஷ்குமார் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
04-Sep-2024