மேலும் செய்திகள்
ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு
07-Oct-2024
திருப்பூர் : உலக அமைதியை வலியுறுத்தி, சென்னை சில்க்ஸ் குழுமம் சார்பில் ஞாயிறுதோறும் அவிநாசியில் அமைதி ஊர்வலம் நடந்து வருகிறது. முதல் உலகப்போர் முடிவுக்கு வந்து, 1918 நவ., 11ம் தேதி, உலக அமைதி நாளாக அறிவிக்கப்பட்டது. துரதிஷ்ட வசமாக இரண்டாம் உலகப்போர் நடந்தாலும், இனிமேல் போர் இல்லாத நிலையை, ஒட்டுமொத்த மனித இனமும் எதிர்பார்க்கின்றன.இதற்காக, வரும், நவ., 11ம் தேதி அன்றும், அதுவரை ஒவ்வொரு நாளும், 11:11 மணிக்கு, அமைதி காப்போம் என, சென்னை சில்க்ஸ் குழுமம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எஸ்.சி.எம்., ஸ்பின்னிங் மில் சார்பில், உலக அமைதி தினத்தையெட்டி, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், அவிநாசியில், அமைதி ஊர்வலம் நடந்து வருகிறது.வரும் நவ., 11ம் தேதி வரை, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், காலை, 6:30 முதல், 8:30 மணி வரை, அவிநாசியில் அமைதி ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி, தி சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் விநாயகம் வழிகாட்டுதலுடன், அமைதி ஊர்வலம் நடந்து வருகிறது.கடந்த, 13ம் தேதி, அவிநாசி அவிநாசிலிங்கேஸ்வர் கோவில் தேர்நிலை அருகே துவங்கி, நான்கு ரத வீதிகள் வழியாக, அமைதி ஊர்வலம் நடந்தது. முன்னதாக, தேசத்தின் அமைதி காப்பேன் - உலக அமைதி காப்பேன் என, உறுதிமொழி ஏற்றனர்.அமைதி ஊர்வலத்தை, எஸ்.சி.எம்., ஸ்பின்னிங் மில்ஸ் அலுவலக மேலாளர் பழனிவேல் ஒருங்கிணைத்து வருகிறார். ஊர்வலத்தில் விழிப்புணர்வு பதாகைகளுடன், எஸ்.சி.எம்., ஸ்பின்னிங் மில்ஸ் அலுவலர்கள், மற்றும் பணியாளர்கள் பங்கேற்று அமைதியை நிலைநாட்ட முயற்சி எடுத்து வருகின்றனர்.
07-Oct-2024