உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்மார்ட் மாடர்ன் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

ஸ்மார்ட் மாடர்ன் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

திருப்பூர்; திருப்பூரில் உள்ள ஸ்மார்ட் மாடர்ன் பள்ளி யில் பத்தாம் மற்றும் பிளஸ் 2வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.திருப்பூர், அவிநாசி ரோடு, அம்மாபாளையத்தில் உள்ள ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுதேர்வில் அனைத்து மாணவர்களும், நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி நிர்வாகத்தின் சார்பாக, பாராட்டுகளும், வாழ்த்துக்களும் தெரிவித்தனர். பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு பாராட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.இப்பாராட்டுதல் விழாவில், மாணவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்த பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளி முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர் ஆகியோரை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை