உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்மைலிங் பாரத் - 2.0 விழிப்புணர்வு பேரணி

ஸ்மைலிங் பாரத் - 2.0 விழிப்புணர்வு பேரணி

திருப்பூர்; ஐ.ஓ.எஸ்., எனப்படும் இந்திய பல் சீரமைப்பு துறை சங்கம் நடத்தும் தேசிய அளவிலான 'ஸ்மைலிங் பாரத் - 2.0' திட்டத்தின் துவக்கமாக, ஆர்.வி.எஸ்., பல் மருத்துவக்கல்லுாரி, ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லுாரி ஆகியன இணைந்து கோவை ரேஸ்கோர்ஸில் பல் சீரமைப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். இக்கல்லுாரிகளின் மூத்த பேராசிரியர்கள், மாணவர்கள், தமிழகத்தின் முக்கிய பல் சீரமைப்பு நிபுணர்கள் பங்கேற்றனர். ஆர்.வி.எஸ்., பல் மருத்துவக்கல்லுாரி டீன் டாக்டர் விஜய், பல் சீரமைப்புத்துறை தலைவர் டாக்டர் ராஜசேகரன், ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லுாரி டீன் டாக்டர் தீபானந்தன், இந்திய பல் சீரமைப்பு சங்கப் பிரதிநிதி டாக்டர் அப்ரோஸ் கன்னா, எம்.ஓ.எஸ்.ஜி., குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் விஜய் ஆதித், டாக்டர் கிேஷார் டென்டிஸ்ட்ரி நிறுவனர் டாக்டர் கிேஷார் குமார், மூத்த பல் சீரமைப்பு நிபுணர் டாக்டர் டி.பி.சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல் சீரமைப்பு மற்றும் அழகான புன்னகை ஒவ்வொருவருக்கும் உரிமை என்பதை பேரணி உணர்த்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ