உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கால்நடையை தாக்கும் நோய்களுக்கு தீர்வு! அவிநாசியில் வரும், 25ல் கருத்தரங்கு

கால்நடையை தாக்கும் நோய்களுக்கு தீர்வு! அவிநாசியில் வரும், 25ல் கருத்தரங்கு

அவிநாசி, ; கால்நடைகளை தாக்கும் பெரிய அம்மை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு தீர்வு காண்பது தொடர்பான கருத்தரங்கு, வரும், 25ல் அவிநாசியில் நடக்கிறது.'வனத்துக்குள் திருப்பூர்' வெற்றி அமைப்பு, அவிநாசி கொங்கு வேளாளர் அறக்கட்டளை ஆகியன சார்பில், சேவூர் ரோட்டில் உள்ள கொங்கு கலையரங்கில் இக்கருத்தரங்கு, 25ம் தேதி காலை, 9:00 மணி முதல் நடக்கிறது. இதில், கால்நடைகளை தாக்கும் பெரியம்மை நோய்க்கு தீர்வு காண்பது குறித்தும், மரபு வழி மூலிகை வைத்தியம் சார்பில் அவற்றை குணப்படுத்துவது குறித்தும், ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர் புண்ணியமூர்த்தி விளக்கமளிக்க உள்ளார்.'தோட்டங்களில் இருந்து கிடைக்கும் மூலிகையை கொண்டும், இயல்பாக கிடைக்கும் பொருட்களின் உதவியுடன், கால்நடைகளுக்கு வரும் நோய்களை குணப்படுத்தும் வழிமுறை குறித்து, இக்கருத்தரங்கில் விளக்கப்படும்.மேலும், மாடுகளில் மடி நோய், குடற்புழு நோய், கோழிகளை தாக்கும் வெள்ளை கழிசல், ஆடுகளை தாக்கும் கொள்ளை நோய், கழிசல் உள்ளிட்டவற்றுக்கும் தீர்வு வழங்கப்பட இருக்கிறது. விவசாயிகள் திரளாக பங்கேற்க வேண்டும்,' என, கருத்தரங்கு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ