மேலும் செய்திகள்
நிரந்தரமான ரேஷன் கடை எம்.எல்.ஏ.,விடம் மனு
04-Apr-2025
திருப்பூர்; திருப்பூர், தாராபுரம் ரோட்டில், தெற்கு போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வந்தது. தற்போது இந்த இடத்தில் விசாலமான புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது. இதனால், தற்காலிகமாக போலீஸ் ஸ்டேஷன், பல்லடம் ரோடு, காட்டன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள ஒரு கட்டடத்தில் இதற்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.புதிய தற்காலிக வளாகத்தில் ஸ்டேஷன் நேற்று முதல் இயங்கத் துவங்கியது. மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் தீபா சத்யன் மற்றும் ராஜராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர். புதிய ஸ்டேஷன் கட்டுமானப் பணி நிறைவடைந்த பின், அந்த கட்டடத்தில் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் செயல்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
04-Apr-2025