மின் வாரிய அலுவலகத்தில் சிறப்பு குறைகேட்பு முகாம்
திருப்பூர்,; மின் வாரியம் சார்பில் சிறப்பு குறைகேட்பு முகாம் நாளை (5ம் தேதி) திருப்பூரில் நடைபெறவுள்ளது.திருப்பூர் மின் வாரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் அறிக்கை:திருப்பூர் மின் பகிர்மான வட்டம் சார்பில் 5ம் தேதி(நாளை), சிறப்பு குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது. குமார் நகர் மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை செயற்பொறியாளர் தலைமையில் மின் நுகர்வோரிடம் குறைகள் கேட்கப்படும். பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பழுதான மின் மானிகள், பழுதான மின் கம்பங்கள், மின்அழுத்த குறைபாடுகள், மின் கட்டண குறைபாடுகள் ஆகியன குறித்து இதில் தெரிவித்து தீர்வு பெறலாம். அவிநாசியில்
அவிநாசி - மங்கலம் ரோட்டில் உள்ள மின் வாரிய செயற்பொறியாளர் இயக்குதலும் பேணுதலும் அலுவலகத்தில், 5ம் தேதி(நாளை) காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை, மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் நடக்கிறது. மேற்பார்வை பொறியாளரிடம் நேரடியாக குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி காணலாம்.