மேலும் செய்திகள்
மாற்று திறன் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை
19-Nov-2025
உடுமலை: குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று (9ம் தேதி) நடக்கிறது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை, குடிமங்கலம் வட்டார வள மையம் சார்பில், மாற்றுத்திறன் மற்றும் சிறப்பு கவனம் தேவைப்படும், 18 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடக்கிறது. குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில், காலை, 9:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை முகாம் நடைபெறும். பிறப்பு முதல், 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படும். பத்து வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறன் மாணவர்களின் விபரங்கள், நல வாரியத்தில் பதிவு செய்யப்படும். புதிய தேசிய அடையாள அட்டை பெறுதல் மற்றும் புதுப்பித்தல் யு.டி.ஐ.டி., பதிவு செய்தல், பஸ், ரயில் பயணச் சலுகை, கட்டணமில்லா அறுவை சிகிச்சை, மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஏற்பாடுகள் மற்றும் உதவி உபகரணங்கள் வழங்குவது குறித்து பரிந்துரை செய்யப்படும். முகாமிற்கு வருபவர்கள், பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-5, ரேஷன்கார்டு மற்றும் ஆதார் அடையாள அட்டை நகல் கட்டாயம் கொண்டு வர வேண்டும். இத்தகவலை குடிமங்கலம் வட்டார வள மையத்தினர் தெரிவித்துள்ளனர்.
19-Nov-2025