துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
உடுமலை; உடுமலை நகராட்சியில் துாய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. உடுமலை நகராட்சியில், தூய்மை பாரதம் இயக்கத்தின் கீழ், ஒவ்வொரு வாரமும் உள்ளாட்சிகளில் பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக, உடுமலை நகராட்சியில் துாய்மை பணியாளர்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில், ரத்தத்தின் அளவு, ரத்த அழுத்தம், கண் பரிசோதனை, கை கால் வலி, சர்க்கரை அளவு என பல்வேறு மருத்துவ பரிசோனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ ஆலோசனைகள், மருந்துகள் வழங்கப்பட்டன. இம்மருத்துவ முகாமில், 172 தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்றனர். அரசு மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.