மேலும் செய்திகள்
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
26-Apr-2025
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி தாலுகா, எஸ்.பெரியபாளையத்தில் உள்ள ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவில், ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.வானர சேனையின் தலைவனான சுக்ரீவன், ராமர் நடத்திய போரில் வெற்றி வேண்டியும், இத்தலத்தில் வழிபட்டதாக தல வரலாறு கூறுகிறது.பாகிஸ்தான் தீவிரவாதிகளின் அத்துமீறலை அடக்க, இந்திய ராணுவம் வியூகம் அமைத்து அதிரடி காட்டி வருகிறது.இந்நிலையில், 'ஆபரேஷன் சிந்துார்' வியூகம் வெற்றி பெற்று, ஆபத்து நீங்கி பாரதம் அமைதி பெற வேண்டும் என்று வேண்டி, நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவிலில், இரண்டு நந்திகள் இருப்பது விேஷசம்; குறிப்பாக பிரதோஷ நாட்களில், வேண்டியது நடக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. அதன்படி, சனிபிரதோஷமான நேற்று, பக்தர்கள் சார்பில் கூட்டு வழிபாடு நடந்தது.கோவில் தலைமை அர்ச்சகர் நாகராஜ் குருக்கள் கூறியதாவது:ஆவுடைநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவில், ஆயிரம் ஆண்டுகள் பழமையானது; வேறு எங்கும் இல்லாத வகையில், இரண்டு நந்திகள் உள்ளன; சுக்ரீஸ்வரர் வழிபட்ட தலம் என்பதால், சுக்ரீஸ்வரர் என்ற பெயருடன் சிவபெருமான் அருள்பாலிக்கிறார்.இந்தியா சர்வ வல்லமையுடன் போரில் வெற்றி பெற வேண்டும். சதுர்த்தசி திதியில் தான், நரசிம்மர் இரணியனை வதம் செய்தார். அதே வேளையில், நாட்டு நலனுக்காக சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளோம்.'நமது ராணுவ வீரர்கள், தீவிரவாதிகளை அழித்து, எதிரிபடையை வெற்றி கொள்ள வேண்டும். இந்திய ராணுவ தாக்குதல் திட்டமிட்டபடி நடந்து, நம் நாட்டு மக்கள்ஆபத்து நீங்கி, அமைதியுடன் வாழ வேண்டும்' என்று, தேவாரம், திருவாசக பதிகங்களை பாராயணம் செய்து, சுக்ரீஸ்வரரிடம் விண்ணப்பித்துள்ளோம்; தீவிரவாதிகளை ஒடுக்கி, இந்தியா வெற்றிவாகை சூடும்.இவ்வாறு, அவர் கூறினார்.
26-Apr-2025