உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூரில் நிற்கும் சிறப்பு ரயில்

திருப்பூரில் நிற்கும் சிறப்பு ரயில்

திருப்பூர்; 'ைஹதராபாத் - கொல்லம் சிறப்பு ரயில், கோவை செல்லாது; திருப்பூரில் நின்று செல்லும்,' என, அறிவிக்கப்பட்டுள்ளது.பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க, ஜூன் 6 வரை சனிக்கிழமை தோறும், ைஹதராபாத் - கொல்லம் சிறப்பு ரயில் (எண்:07193) அறிவிக்கப்பட்டுள்ளது. சனி இரவு 11:10க்கு புறப்படும் ரயில், திங்கள் காலை 7:10க்கு கொல்லம் செல்லும்; திருப்பூருக்கு, ஞாயிறு இரவு, 9:13க்கு வரும்; கோவைக்கு இந்த ரயில் செல்லாது.ஜூன் 30 வரை திங்கள்தோறும் கொல்லம் - ைஹதராபாத் சிறப்பு ரயில் (எண்:07194) இயங்கும். காலை 10:45க்கு புறப்படும் ரயில் மறுநாள் மாலை, 5:30க்கு ைஹதராபாத் செல்லும். போத்தனுாரை மாலை 6:20க்கு கடக்கும் ரயில்; கோவை செல்லாது; திருப்பூரை, இரவு 7:20 க்கு கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை