உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சபரிமலைக்கு சிறப்பு ரயில்

சபரிமலைக்கு சிறப்பு ரயில்

திருப்பூர் ; 'சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, கச்சிக்குடா - கோட்டயம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும்,' என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.வரும், 21, 28ம் தேதி, கச்சிக்குடாவில் இருந்து மதியம், 3:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்:07133) மறுநாள் மாலை 6:50 க்கு கோட்டயம் சென்று சேருகிறது. திருப்பூருக்கு காலை, 10:43 மணிக்கு இந்த ரயில் வரும்.மறுமார்க்கமாக கோட்டயத்தில் இருந்து கச்சிக்குடாவுக்கு இன்று, 22 மற்றும் 29ம் தேதி சிறப்பு ரயில் (எண்:07134) இயக்கப்படுகிறது.திருப்பூருக்கு அதிகாலை 3:43 மணிக்கு இந்த ரயில் வரும். இந்த இரு ரயில்களும் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ