உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புதன்கிழமை தோறும் சபரிமலைக்கு சிறப்பு ரயில்

புதன்கிழமை தோறும் சபரிமலைக்கு சிறப்பு ரயில்

திருப்பூர், : சபரிமலை பயணிக்கும் பக்தர்கள் வசதிக்காக புதன்கிழமை தோறும், பெங்களூரு - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.வரும், 13 ம் தேதி முதல், அடுத்தாண்டு ஜன., 29 ம் தேதி வரை ஒவ்வொரு புதன்கிழமையும் மதியம், 12:45 க்கு பெங்களூருவில் புறப்படும் ரயில் (எண்:06084) மறுநாள் காலை, 6:45 க்கு திருவனந்தபுரம் சென்று சேரும். கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட், சேலம், ஈரோடு, திருப்பூர் ஸ்டேஷனில் நிற்கும் ரயில், கோவை செல்லாமல், போத்தனுார் வழியாக, திருவனந்தபுரம் சென்று சேரும்.மறுமார்க்கமாக, வரும், 12 முதல், அடுத்த ஆண்டு ஜன., 28 வரை செவ்வாய் தோறும் சிறப்பு ரயில் (எண்:06083) இயங்கும். மாலை, 6:05 க்கு திருவனந்தபுரத்தில் புறப்படும் ரயில், மறுநாள் காலை, 10:55 க்கு பெங்களூரு சென்று சேரும். இந்த ரயிலில், 16 ஏ.சி., இரண்டு படுக்கை வசதி உட்பட, 19 பெட்டிகள் இருக்கும். நேற்று சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு துவங்கியுள்ளதாக, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை