ரேவதி மெடிக்கல் சென்டரில் சிறப்பு சிறுநீரக சிகிச்சை பிரிவு
திருப்பூர்; திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டர் தலைவர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:எங்கள் மருத்துவமனையில், ரேவதி சிறப்பு சிறுநீரக சிகிச்சை மற்றும் டயாலிசிஸ் பிரிவு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் அவசர சிகிச்சை மற்றும் அவசர டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு செயல்படுகிறது. இந்த பிரிவில் சிறுநீரக சிகிச்சை மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஹரிஷ் சிவஞானம் முழு நேர மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வருகிறார்.இப்பிரிவில், தீவிர சிறுநீரக கோளாறுகள், சிறுநீரக பிரச்னைகள், சிறுநீர் பாதை நோய் தொற்றுகள், வருமுன் காக்கும் சிறுநீரக நோய்கள், சிறுநீரக வீக்கம், அதீத ரத்த அழுத்தம், ஹீமோ மற்றும் பெரிட்டோனியல் டயாலிசிஸ் சிகிச்சைகள் தேவைப்படுபவர்களுக்கு சிறப்பு கவனம் வழங்கப்படுகிறது.மேலும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இலவச டயாலிசிஸ் சிகிச்சை வழங்கப்படுகிறது.சிறுநீரக மருத்துவரின் ஆலோசனை பெற மற்றும் டயாலிசிஸ் சிகிச்சை தொடர்பான விளக்கங்களுக்கு தொடர்பு கொள்ள 98422 09999 என்ற எண்ணில் அழைக்கலாம்.