உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விளையாட்டு தின கட்டுரை போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

விளையாட்டு தின கட்டுரை போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

- நமது நிருபர் -விளையாட்டு தினத்தையொட்டி நடந்த கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கடந்த மாதம் 29ம் தேதி தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. ஹாக்கி விளையாட்டின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த, மேஜர் தயான்சந்த் பிறந்தநாளை நினைவு கூறும் வகையிலான இந்நாளில், திருப்பூர் தடகள சங்கம் மற்றும் 'மை இந்தியா; மை ஸ்கூல்' அமைப்பின் சார்பில், திருப்பூர் மாவட்ட பள்ளி, கல்லுாரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர், உடற்கல்வி இயக்குனர், ஆசிரியர்கள் உட்பட பல்வேறு பிரிவினருக்கான, கட்டுரைப் போட்டி, பல தலைப்புகளில் நடத்தப்பட்டது. இதில்,வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகர், கொங்கு நகர சரக காவல் உதவி ஆணையர் கணேஷ், தடகள சங்க தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை