உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  விபூதி அலங்காரத்தில் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர்

 விபூதி அலங்காரத்தில் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர்

உடுமலை: உடுமலை, கடத்துார் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில், மார்கழி மாதம் முழுவதும், தினமும் ஒரு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். உடுமலை அருகே, கடத்துார் அமராவதி ஆற்றங்கரையில், நுாற்றாண்டுகள் பழமையான, பிரசித்தி பெற்ற ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவில் உள்ளது. மாதங்களில் சிறந்த மாதமாகவும், இறைவனுக்கு உகந்தமாதமான, மார்கழி மாதத்தில், சந்தனகாப்பு, மலர், வில்வம் என தினமும் ஒரு அலங்காரத்தில் சிவபெருமான் எழுந்தருளி வருகிறோர். நேற்று, விபூதி அலங்காரத்தில், சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி