ஸ்ரீமாகாளியம்மன் பூச்சாட்டு விழா
திருப்பூர்,; தென்னம்பாளையம் ஸ்ரீசக்தி விநாயகர்,ஸ்ரீமாகாளியம்மன்,ஸ்ரீவீரமாத்தியம்மன், தன்னாசியப்பன் கோவில் 13ம் ஆண்டு பூச்சாட்டு விழா, 11ம் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியுடன்துவங்கியது.கடந்த, 13ம் தேதி பொரி சாட்டு நடந்தது. கடந்த, 16ம் தேதி கொடுங்கலுார் பகவதி அம்மன் கோவில் மணியம்மா சுவாமி தலைமையில் குத்துவிளக்கு பூஜை நடந்தது. கணபதி ேஹாமம், காப்புக்கட்டு பூஜையுடன் கம்பம் நடப்பட்டது.இன்று கொடுமுடியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிேஷகம் நடக்கிறது. நாளை, படைக்கலம், முளைப்பாரி, அம்மை அழைத்தல் நிகழ்ச்சியும், 21ம் தேதி திருக்கல்யாண உற்சவம், மாவிளக்கு ஊர்வலமும் நடக்கிறது.பொங்கல் விழாவை முன்னிட்டு, மாகாளியம்மனுக்கு, சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்று வருகிறது. இன்று சாமுண்டீஸ்வரி அலங்காரமும், நாளை துர்க்கை அம்மன் அலங்காரம், 21ம் தேதி மாகாளியம்மன் அலங்காரம், 22ல் கவச அலங்காரம், 23ல் அன்னபூரணி அலங்கார பூஜைகள் நடக்கின்றன.