உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீ முருக விலாஸ் நெல்லை பெரிய லாலா ஸ்வீட்ஸ்; திருப்பூரில் கிளை துவக்கம்

ஸ்ரீ முருக விலாஸ் நெல்லை பெரிய லாலா ஸ்வீட்ஸ்; திருப்பூரில் கிளை துவக்கம்

திருப்பூர், ; கோவையில் 60 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க ஸ்ரீ முருக விலாஸ் ஒரிஜினல் நெல்லை பெரிய லாலா கார்னர் ஸ்வீட்ஸின் 16 வது கிளை, திருப்பூரில் திறக்கப்பட்டுள்ளது.கோவையில், 100 அடி ரோடு, வடவள்ளி, சரவணம்பட்டி, துடியலுார், சிட்ரா, பெரியநாயக்கன்பாளையம், கணபதி, சுந்தராபுரம், ராமநாதபுரம், இடையர்பாளையம், குரும்பபாளையம், சாயிபாபா காலனி, அத்திப்பாளையத்திலும், அவிநாசியில், கோவை - சேலம் நெடுஞ்சாலையில் ஹரிபவன் ஓட்டல் அருகிலும் ஸ்ரீ முருகவிலாஸ் ஒரிஜினல் நெல்லை பெரிய லாலா கார்னர் ஸ்வீட்ஸ் செயல் படுகிறது.திருப்பூரில் முதல் முறையாக, திருப்பூர் - அவிநாசி ரோடு, காந்தி நகரில், ரிலையன்ஸ் ஸ்மார்ட் அருகே, ஈஸ்வரன் காம்ப்ளக்ஸில் புதிய கிளை உருவாக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த விழாவில், இதன் நிர்வாக இயக்குனர் மாரியப்பன் திறந்துவைத்தார். செயல் இயக்குனர் ரகு உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.திறப்பு விழா சலுகையாக, ஒரு கிலோ இனிப்பு வாங்கியோருக்கு அரை கிலோ மிக்சர்; அரை கிலோ இனிப்புக்கு, கால் கிலோ மிக்சர் இலவசமாக வழங்கப்பட்டது.இன்று (19ம் தேதி) முதல், வரும் 25ம் தேதி வரை, ஸ்வீட், கார வகைகளுக்கு, விலையில் 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. நுாறு வகையான இனிப்பு, கார வகைகளை, ஸ்ரீ முருகவிலாஸில் வாங்கி ருசிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு, 98431 88132, 95005 88132 என்கிற எண்களில் தொடர்புகொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை