உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீ சஷ்டி கார்ஸ் நிறுவனத்தில் புதிய டிசையர் கார் அறிமுகம்

ஸ்ரீ சஷ்டி கார்ஸ் நிறுவனத்தில் புதிய டிசையர் கார் அறிமுகம்

திருப்பூர் : திருப்பூர் - காங்கயம் ரோட்டிலுள்ள மாருதி அரினா பிளாட்டினம் டீலரான ஸ்ரீ சஷ்டி கார்ஸ் ஷோரூமில், புதிய டிசையர் கார் அறிமுக விழா நேற்று நடைபெற்றது.ஸ்ரீ சஷ்டி கார்ஸ் நிறுவன நிதி இயக்குனர் தரணிப்பிரியா தலைமை வகித்தார். எஸ்.பி.ஐ., மண்டல மேலாளர் சங்கரசுப்பிரமணியன் மற்றும் கோவை மண்டல விற்பனை மேலாளர் அப்துல்காதர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். ஆண்டிபாளையம் எஸ்.ஆர்., நகரை சேர்ந்த புவனேஷ்வரன், முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார்.ஸ்ரீ சஷ்டிகார்ஸ் பொதுமேலாளர் ரஞ்சித் குமார் கூறியதாவது:மாருதி நிறுவனத்தின், 4ம் தலைமுறை நியூ டிசையர் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரில் முதல்முறையாக, இசட் சீரியஸ் இன்ஜின் அறிமுகமாகி உள்ளது. இதனால் அதிகபட்சம், 24.79 கி.மீ, மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக், 25.71 கி.மீ., மற்றும் சி.என்.ஜி., 33.73 கி.மீ., மைலேஜ் பெறலாம்.'குளோபல் என் கேப்' ஐந்து நட்சத்திர பாதுகாப்பு அந்தஸ்து பெற்றுள்ளது. அனைத்து வேரியன்ட்களிலும், 6 ஏர் பேக், முதன்முறையாக எலக்ட்ரிக் சன் ரூப், வயர்லெஸ் சார்ஜர், 360 டிகிரி எச்.டி., கேமரா, ஹில்ஹோல்ட் அசிஸ்ட், சீட்பெல்ட், ரிமைண்டர் போன்ற வசதிகள் உள்ளன. ரியர் ஏ.சி., சுசூகி கனெக்ட் - 9 இன்ச், தொடுதிரை அம்சங்களும் உள்ளன. இப்புதிய டிசையர் காரின் ஆரம்ப விலை, 6.79 முதல் 10.14 லட்சம் ரூபாயாக உள்ளது. 7 வண்ணத்தில் கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ