உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீகுரு சர்வா சி.ஏ., அகாடமி மாணவர்கள் அபார தேர்ச்சி

ஸ்ரீகுரு சர்வா சி.ஏ., அகாடமி மாணவர்கள் அபார தேர்ச்சி

திருப்பூர்; தமிழகத்தில் கடந்த செப்., 24ம் தேதி சி.ஏ., இன்டர் தேர்வு நடந்தது. அதில், திருப்பூர் ஸ்ரீ குரு சர்வா சி.ஏ., அகாடமியில் பயின்ற, நான்கு மாணவர்கள், இரண்டு குரூப்களிலும், ஒரே முயற்சியில் தேர்ச்சி பெற்றனர்.அகாடமி மாணவர்கள் கவுதம், 325, அனிருத் கிருஷ்ணமூர்த்தி, 323, காவிய சுருதி, 311 மற்றும் பிரணவிகா, 300 மதிப்பெண்கள் பெற்றனர். ஏழு மாணவர்கள் ஒரு குரூப்பில் தேர்ச்சி பெற்றனர். சி.ஏ., பவுண்டேசன் தேர்வில் திருப்பூர் மாவட்ட அளவில் தொடர்ந்து கடந்த, 11 ஆண்டுகளாக சிறப்பிடம் பெற்று வருவதோடு, சி.ஏ., இன்டர் தேர்வில் கடந்த ஆண்டு ராஜேஷ் என்ற மாணவர் தேசிய அளவில், 23 வது இடம் பிடித்து, திருப்பூருக்கே பெருமை சேர்த்தனர்.மேலும், இங்கு படித்த, இரண்டு மாணவர்கள் ஜெயக்குமார் மற்றும் விஷ்ணு பாண்டி காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் அக்கவுண்ட்ஸ் பாடத்தில், 97 மற்றும் 96 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் சாதனை படைத்தனர்.இதுகுறித்து, ஸ்ரீ குரு சர்வா சி.ஏ., அகாடமி நிர்வாகிகள் கூறியதாவது:வெற்றிகரமாகவும் அதிக தேர்ச்சி சதவீதத்துடன் ஸ்ரீ குரு சர்வா சி.ஏ., அகாடமி செயல்பட்டு வருகிறது. இங்கு படித்த பல மாணவர்கள் இன்று ஆடிட்டர்களாக இருக்கின்றனர். இங்கு முழு நேர பயிற்சி வகுப்புகளாக காலை முதல் மாலை வரை வகுப்புகள் நடக்கிறது. இப்போது சேர்க்கை துவங்கி உள்ளது. இதில், பிளஸ்2 படித்து கொண்டிருக்க கூடிய மாணவர்களும் இப்பொழுதே பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 96009 - 22888 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை