எஸ்.ஆர்.எம்., ஸ்வீட்ஸ் அண்ட் கேக்ஸ் காங்கயம் சாலையில் புதிய கிளை திறப்பு
திருப்பூர்; திருப்பூர், காங்கயம் சாலையில், எஸ்.ஆர்.எம்., ஸ்வீட்ஸ் அண்ட் கேக்ஸ் புதிய கிளை திறப்பு விழா நடந்தது. உரிமையாளர் மகுடீஸ்வரன் தலைமை தாங்கினார். ஜெயச்சந்திரன் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். இயக்குனர்கள் சுடர்வண்ணன், பரணிதரன் ஆகியோர் விற்பனையை துவக்கிவைத்தனர். கொங்கு வேளாளர் பள்ளி டிரஸ்ட் செயலாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன், கே.ஆர்.செந்தில்குமார் ஆகியோர் பெற்று கொண்டனர். மணிமேகலை மகுடீஸ்வரன், குமார், தாரணி சுடர்வண்ணன், சுரசிந்து பரணிதரன் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றினர். ''புதிய கிளையில் வரும் 29, 30 ஆகிய இரண்டு நாட்களுக்கு சிறப்பு சலுகையாக ஒரு கிலோ இனிப்பு வாங்குவோருக்கு ஒரு கிலோ காரம் இலவசம். சிறப்பு சலுகையாக 31ம் தேதி முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை மைசூர்பாகு கிலோ 640 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய்க்கு கிடைக்கும். ஜிலேபி, மிக்சர், கைமுறுக்கு கிலோ 400க்கு பதிலாக 300 ரூபாய்க்கு பெறலாம். செப்., மாத கடைசி வாரத்தில் தீபாவளி ஸ்பெஷல் ஆர்டர்கள் வரவேற்கப்படுகின்றன'' என்று உரிமையாளர் தெரிவித்தார். ஈரோடு திரு.வி.க.,வீதி, முனிசிபல் காலனியைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தின் கிளைகள், ஈரோடு, திருச்செங்கோடு, நாமக்கல், கோபி, சத்தியமங்கலம், திருப்பூர் பகுதிகளில் செயல்படுகிறது.