உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கத்ரீனாள் சர்ச் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

கத்ரீனாள் சர்ச் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருப்பூர்; புனித கத்ரீனாள் சர்ச் தேர்த்திருவிழா, 8ம் தேதி நடைபெற உள்ளது; சிறப்பு ஆராதனையுடன் நேற்று கொடியேற்றம் நடந்தது. திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள, புனித கத்ரீனாள் சர்ச்சில், அன்னை மரியாவின் பிறப்பு பெருவிழா, ஆண்டுதோறும் தேர்த்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு தேர்த்திருவிழா, 8ம் தேதி நடக்க உள்ளது. நேற்று கொடியேற்று விழா நடந்தது. கோவை மறை மாவட்ட முதன்மை குரு, ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமையில், திருப்பலியை தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. தினமும், வேளாங்கண்ணி அன்னையின் பிறப்பு பெருவிழா ஆன்மிக தயாரிப்பு கூட்டங்கள் நடைபெற உள்ளது. தினமும், மாலை, 5:00 மணிக்கு ஆன்மிக நிகழ்ச்சி நடைபெறும். வரும், 8ம் தேதி வேளாங்கண்ணி அன்னை பிறப்பு பெருவிழா நடக்கிறது. மாலையில், திருப்பலி நிறைவு பெற்றதும், வேளாங்கண்ணி அன்னையின் தேர்பவனியும், நற்கருணை ஆசீரும், அதனை தொடர்ந்து, உணவு வழங்கப்படும் என சர்ச் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ