உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மாநில யோகா போட்டி; லயன்ஸ் பள்ளி அசத்தல்

 மாநில யோகா போட்டி; லயன்ஸ் பள்ளி அசத்தல்

திருப்பூர்: கோவையில் நடந்த மாநில யோகா போட்டியில், லயன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர் அசத்தினார். தமிழக அளவிலான யோகா போட்டிகள், கோவை மாவட்டம், அன்னுாரில் சமீபத்தில் நடந்தது. இதில், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இரு பாலருக்கும், தனித்தனி பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. அவ்வகையில், ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை பல்லடம், ஆறாக்குளம் லயன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் பெற்றனர். பள்ளி தலைவர் டாக்டர் கந்தசாமி வாழ்த்தினார். பள்ளி முதல்வர் சிவபாலன், மேலாளர் விக்னேஷ் பரமாத்மா மற்றும் ஒருங்கிணைப்பாளர் வினிலா டேனி ஆகியோர் பங்கேற்று பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை