மேலும் செய்திகள்
எலைட் டாஸ்மாக் கடையில் ரூ.1.37 கோடி முறைகேடு
28-Dec-2024
திருப்பூர்; காங்கயம் பகுதியில் நடக்கும் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்க வேண்டும்; தவறினால் களம் இறங்கி செயல்படுவோம் என, வி.சி.க.,வினர் தெரிவித்துள்ளனர்.காங்கயம் ஒன்றிய வி.சி.க., சார்பில், தாசில்தார் மற்றும் டி.எஸ்.பி., ஆகியோரிடம் நேற்று அளித்த மனு:காங்கயம் சுற்றுப்பகுதியில் விதிகளை மீறி மது விற்பனை நடக்கிறது. மதுக்கடை பார்களில், 24 மணி நேரமும் சட்ட விரோத மது விற்பனை நடப்பதால், தினக்கூலி தொழிலாளர்கள் அதை அருந்தி தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கின்றனர்.மேலும், பல்வேறு இடங்களில் ரேஷன் அரிசி கடத்தி, அரிசி ஆலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை உரிய அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் எங்கள் கட்சியினர், இது போன்ற ஆட்களை பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் அறவழிப் போராட்டம் நடக்கும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
28-Dec-2024