மேலும் செய்திகள்
திருவாடானை கல்லுாரியில் நாளை முதல் கலந்தாய்வு
01-Jun-2025
- நிருபர் குழு -உடுமலை அரசு கலைக்கல்லுாரி சிறப்பு பிரிவு கலந்தாய்வில், 19 மாணவர்கள் சேர்க்கை பதிவு செய்துள்ளனர்.உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், இளநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று முதல் துவங்கியுள்ளது.மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், ராணுவ குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் உட்பட சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில் 19 மாணவர்கள் சேர்க்கை பதிவு செய்துள்ளனர்.தொடர்ந்து இன்றும் விடுபட்ட சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளை (4ம்தேதி) முதல் துவங்குகிறது.தரவரிசை பட்டியல் அடிப்படையில் கலந்தாய்வு நடக்கிறது. கல்லுாரி பொறுப்பு முதல்வர் சிவக்குமார் தலைமையில், பேராசிரியர்கள் கலந்தாய்வை ஒருங்கிணைத்தனர். பொள்ளாச்சி
பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பி.ஏ., ஆங்கிலம், பி.எஸ்சி., கணிதம், பி.காம்.,(சி.ஏ.,), பி.காம்.,(பி.ஏ.,), பி.பி.ஏ., ஆகிய பாடப்பிரிவுகளுடன் செயல்படுகிறது. நடப்பாண்டில், பி.எஸ்சி., கணினி அறிவியல், பி.காம்., பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன.இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்காக, 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தொடர்ந்து, கலந்தாய்வு நேற்று துவங்கியது. கல்லுாரி முதல்வர் சுமதி தலைமை வகித்தார்.இதில், ஷிப்ட்,1ல் பி.ஏ., ஆங்கிலம், பி.எஸ்சி., கணிதம், பி.காம்.,(சி.ஏ.,) பி.காம்.,(பி.ஏ.,), பி.பி.ஏ., ஆகிய பாடப்பிரிவுகளுக்கான, 300 இடங்கள் உள்ளன.ஷிப்ட் 2ல் (மதியம்) பி.எஸ்சி., கணினி அறிவியல் மற்றும் பி.காம்., பாடப்பிரிவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள, 120 இடங்களுக்கான பொது கலந்தாய்வு நடந்தது.சிறப்பு பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள், விளையாட்டு, என்.சி.சி., செக்யூட்ரி போர்ஸ் பாடப்பிரிவுகளுக்கு நேற்று நடைபெற்றது. அதில், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு கோட்டாவுக்கான பிரிவில் ஐந்து பேருக்கு அட்மிஷன் நடந்தது.வரும், 4, 6, 9ம் தேதிகளில் கலந்தாய்வு நடைபெறுகிறது. இத்தகவலை கல்லுாரி முதல்வர் தெரிவித்தார். வால்பாறை
வால்பாறை அரசு கலை மற்றும் அறியவில் கல்லுாரியில், பி.காம்., பி.காம்.,(சிஏ), பி.பி.ஏ., பி.எஸ்சி.,(கம்யூட்டர் சயின்ஸ்), பி.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி, பி.சி.ஏ., பி.ஏ.,(தமிழ்), பி.ஏ.,(ஆங்கிலம்) ஆகிய பாடப்பிரிவுகளுக்கு நேற்று, மாணவர் சேர்க்கை துவங்கியது.கல்லுாரி முதல்வர் ஜோதிமணி தலைமையில் கலந்தாய்வு நடந்தது. இதில், சிறப்பு பிரிவில், 15 மாணவர்கள் பங்கேற்றனர். வரும், 4ம் தேதி முதல் 14ம் தேதி வரை பொதுக்கலந்தாய்வு நடைபெறுகிறது.
01-Jun-2025