உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிவா நிகேதன் பள்ளியில் மாணவர் கவுன்சில் பதவியேற்பு 

சிவா நிகேதன் பள்ளியில் மாணவர் கவுன்சில் பதவியேற்பு 

திருப்பூர்; திருப்பூர், மங்கலம் - பூமலுாரிலுள்ள சிவா நிகேதன் பள்ளியில் மாணவர் கவுன்சில் பொறுப்பாளர்களுக்கான பதவியேற்பு விழா நடந்தது.ஆறு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்கள் தங்கள் ஓட்டுக்களை செலுத்தினர். பள்ளியின் தலைமை மாணவர் பொறுப்பை பிளஸ் 2 மாணவி யாழினி, துணைத் தலைவர் பொறுப்பை பத்தாம் வகுப்பு மாணவி அனிஷ்கா, தலைமை விளையாட்டு மாணவர் பொறுப்பை பிளஸ் 2 மாணவி பிரகல்யா ஆகியோர் பதவியேற்றனர்.விளையாட்டு குழுக்களுக்கான வண்ண அணி தலைவர்களும், உப தலைவர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். தேர்தல் ஜனநாயகமுறைப்படி, மின்னணு வாக்குப்பதிவு முறையில் நேர்மையாக நடந்தது. மாணவர்களின் தலைமை பண்பையும், பொறுப்புணர்வையும் வளர்க்கும் நோக்கத்துடன் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.பள்ளியின் இயக்குனர்கள் அமிர்தா பிரபாகரன், கிருபா ெஷட்டி, ஒருங்கிணைப்பாளர் ப்ரணவியா, பள்ளி முதல்வர் கங்கா மோகன் ஆகியோர் புதிய பொறுப்பாளர்களை பாராட்டி, 'இன்றைய தலைமுறையை சிறந்த வழிகாட்டியாக வளர்ப்பது நம் பள்ளியின் குறிக்கோள், ஒவ்வொருவரும் தங்களுக்கான பதவியில் நேர்மை, ஒழுங்கு, ஒற்றுமை மற்றும் முனைப்புடன் செயல்பட வேண்டும்,' என்றனர். பொறுப்பேற்றுக் கொண்டவர்களை பள்ளி ஆசிரியர், சக மாணவர்கள் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி