உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நடுரோட்டில் நின்ற டஞ்சன் பஸ்; மாணவர் - தொழிலாளர் அவதி

நடுரோட்டில் நின்ற டஞ்சன் பஸ்; மாணவர் - தொழிலாளர் அவதி

பல்லடம்; பல்லடம் அருகே, பழுதாகி நின்ற அரசு பஸ்ஸில் இருந்த பயணிகள், நடு ரோட்டில் இறக்கி விடப்பட்ட நிலையில், மாற்று பஸ் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகினர்.திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் இருந்து திருப்பூர் செல்லும் அரசு டவுன் (வழித்தட எண்: 30), நேற்று காலை, வழக்கம்போல் பல்லடத்தில் இருந்து புறப்பட்டது. ஆறுமுத்தாம்பாளையம் நால்ரோடு பகுதியில், இன்ஜின் கோளாறு காரணமாக பழுதாகி நடுரோட்டில் நின்றது. பயணிகள் அங்கேயே இறக்கி விடப்பட்ட நிலையில், மாற்று பஸ் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகினர். பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பனியன் கம்பெனி தொழிலாளர்கள், அவ்வழியே வந்தவர்களிடம் லிப்ட் கேட்டு சென்றனர்.பழுதான பஸ்சில் பயணித்த சிலர் கூறுகையில், 'பழைய பஸ்ஸான இதுவும் மிகவும் மோசமான கண்டிஷனில் உள்ளது. திருப்பூர் புறப்பட்ட டவுன் பஸ், திக்கி திணறியபடி ஆறுமுத்தாம்பாளையம் வந்தது.சேடபாளையத்தில் இருந்தே, பஸ், இன்ச் இன்ச்சாகத்தான் நகர்ந்தது. அதன்பின், இன்ஜினில் இருந்து புகை வந்து, நடுரோட்டிலேயே நின்றது. இதனால், எங்களை இறக்கி விட்டனர்.இப்பகுதியில் வேறு பஸ் இல்லாத நிலையில், பல்லடம் கிளையில் இருந்து மாற்று பஸ்ஸூம் அனுப்பப்படவில்லை. இதனால், ஆட்டோவிலும், சிலர் லிப்ட் கேட்டும் சென்றனர். இது பரபரப்பான காலை நேரத்தில், எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

BALU
ஜூலை 16, 2025 11:47

நான் திருப்பூர் சின்னக்கரையிலிருந்து உள்ளே தொட்டிஅப்பூச்சி கோவில், அறிவொளி நகர் உள்ளது அங்கிருந்து இந்த செய்தியை அனுப்புகிறேன். பல்லடத்திலிருந்து, கல்லம்பாளையம்,நாரணபுரம், சேடபாளையம் வழியே வரும் பேருந்து பேருந்து நம்பர்.30. நான் பலமுறை இந்த செய்தியை சொல்லி இருக்கிறேன் எந்த விதமான நடவடிக்கை எங்கள் ஊர் எம்.எல்.ஏ., எம்.பி., வார்டு உறுப்பினர்கள் எல்லோரும் இருந்தும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை, எங்கள் ஊரில் தான் வசூல் அதிகம், சரியான நேரத்திற்கு பேருந்து வருவதில்லை,சில நேரங்களில் பேருந்து வருவதில்லை, நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால் அரசு பேருந்து விட முடியவில்லை என்றால் தனியார் பேருந்துக்கு வழி விடுங்கள். 15.07.2025 இன்று காலை 8.30 நாங்கள் எப்பொழுதும் போல பேருந்திற்க்காக காத்து இருந்தோம் காலை 8.30AM வரவேண்டிய பேருந்து 8.40AM வந்தது, வந்த பேருந்து ஆறுமுத்தம்மாபாளையம் தாண்டி பேருந்து ஷார்ட் ஆகாமல் நின்றுவிட்டது. பேருந்து இடையில் நின்றுவிட்டதால் பொது மக்கள் எப்படி வேலைக்கு காலேஜ்,ஸ்கூல் மாணவ,மாணவிகள் எப்படி போவார்கள்.


புதிய வீடியோ