மேலும் செய்திகள்
மது பாட்டில் பதுக்கல்: அ.தி.மு.க., நிர்வாகி கைது
06-Sep-2025
காங்கயம்; காங்கயம் அருகே, 7ம் வகுப்பு மாணவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காங்கயம், தம்மரெட்டிபாளையம் அடுத்த ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி, 35. டிரைவர். அவர் மகன் கோகுல் சங்கர், 12. பரஞ்சேர்வழியில் தனியார் பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கிறார். கடந்த இரு நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தார். நேற்று காலை வீட்டிலிருந்து பள்ளி செல்ல தயாராகிக் கொண்டிருந்த கோகுல்சங்கர் திடீரென வாந்தி எடுத்தார். அருகேயுள்ள சாவடிபாளையம் ஆரம்ப சுகாதார மையத்துக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். முதலுதவிக்கு பின் மேல் சிகிச்சைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் மாணவர் உயிர் பிரிந்தது. இந்த சம்பவம் பெற்றோர் மற்றும் உறவினர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
06-Sep-2025