உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இந்நாள் மாணவர்களுக்கு உதவ அந்நாள் மாணவர்கள் தீர்மானம்

இந்நாள் மாணவர்களுக்கு உதவ அந்நாள் மாணவர்கள் தீர்மானம்

திருப்பூர்; திருப்பூர் பிஷப் உபகாரசாமி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், பொருளாதார ரீதியாக சிரமப்படும், இந்நாள் மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்குவது என்று தீர்மானித்துள்ளனர். திருப்பூர், அவிநாசி ரோடு, குமார் நகரில் உள்ள பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியில், 1971 - 1977ம் ஆண்டில் ஆறு முதல், பிளஸ் 1 வகுப்பு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. 40 ஆண்டுகளுக்கு பின் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் திரண்டனர். தங்கள் பள்ளி பருவ பசுமை நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பள்ளி பருவத்துக்கு பின், கல்லுாரி, குடும்ப வாழ்க்கை போன்ற தங்கள் வாழ்வில் நடந்த எண்ணற்ற சம்பவங்கள் பற்றி பேசி மகிழ்ந்தனர். மறைந்த முன்னாள் மாணவர்கள், எட்டு பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் மாணவர்கள் பள்ளியில் சந்தித்து பள்ளி மற்றும் சமுதாய வளர்ச்சிக்கு உதவுவது, பொருளாதார ரீதியாக சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்குவது என தீர்மானித்தனர். மதியம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவு அருந்திய பின், தாங்கள் படித்த வகுப்பறை, மைதானங்களில் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை