உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போதைக்கு எதிராக மாணவர்கள் சபதம்

போதைக்கு எதிராக மாணவர்கள் சபதம்

திருப்பூர்; சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், போதைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. கலெக்டர் மனீஷ் நாரணவரே, கொடியசைத்து பேரணியை துவக்கிவைத்தார்.எல்.ஆர்.ஜி., கல்லுாரி மாணவியர், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, ஊர்வலமாக சென்றனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் துவங்கிய ஊர்வலம், தென்னம்பாளையம் வரை சென்று திரும்பி, எல்.ஆர்.ஜி., கல்லுாரியை அடைந்தது. போதைப்பொருட்களுக்கு எதிராக அனைவரும் உறுதிமொழி எடுத்தனர்.போலீஸ் துணை கமிஷனர் தீபா, மாவட்ட வன அலுவலர் ராஜேஷ், உதவி கமிஷனர் (கலால்) செல்வி உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.அவிநாசிஅவிநாசி போலீசார், திருப்பூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சார்பில் அவிநாசியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், அவிநாசி அரசு கல்லுாரி மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் துவக்கி வைத்தார். மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் எஸ்.பி., பாலமுருகன், அவிநாசி டி.எஸ்.பி., சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. பேரணி, புதிய பஸ் ஸ்டாண்டில் துவங்க கோவை மெயின் ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட் வரை சென்று மீண்டும் புதிய பஸ் ஸ்டாண்ட் வந்தடைந்தது.---2 படங்கள்திருப்பூர் நஞ்சப்பா பள்ளி மற்றும் அவிநாசியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.

உடல்நலம், மன நலம்

போதையால் பாதிப்புதிருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, நாட்டு நலப்பணித்திட்டம் அலகு - 2 சார்பில், போதை ஓழிப்பு குழு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, விழுதுகள் அமைப்பு சார்பில், சர்வதேச போதைப்பொருள் ஓழிப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.என்.எஸ்.எஸ்., அலகு - 2, ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். விழுதுகள் இயக்குநர் தங்கவேல் முன்னிலை வகித்தார். திட்ட மேலாளர் சந்திரா பேசினார்.திருப்பூர் மாவட்ட சார்பு நீதிபதி மோகனவள்ளி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், ''போதை பொருட்கள் நம்மை சாவின் பாதைக்கு இழுத்து செல்லும் ஒரு கொடிய அரக்கன். கஞ்சா, குட்கா, புகையிலை, அபின் போன்ற எண்ணற்ற வழிகளில் போதை பொருட்கள் கிடைக்கின்றன. போதை பொருட்களை நாம் பயன்படுத்துவதன் மூலம் நமது உடல்நலம் மற்றும் மனநலம் இரண்டும் பாதிக்கிறது. போதை பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தும்; மேலும் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும்,'' என்றார். மனநல ஆலோசகர் ஷாஜிதா ரஹீமா போதை பொருட்களினால் மனநலனில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி பேசினார். விழுதுகள் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.---ஒரு படம்என்.எஸ்.எஸ்., மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் வினியோகித்த திருப்பூர் மாவட்ட சார்பு நீதிபதி மோகனவள்ளி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை