பள்ளிக்கல்வியில் கரை சேர்ந்த மாணவர்கள்! உயரே பறக்க... உலகில் சிறக்க உயர்கல்வி அவசியம்
அறிவியல், கலை மற்றும் தொழில் பிரிவு என, மூன்று பிரிவுகளை தேர்வு செய்து மாணவர்கள், பிளஸ் 2 முடித்திருப்பர். ஜெஇஇ., 'நீட்', 'க்யூட்' என பலவகை நுழைவுத் தேர்வுகள் உள்ளன. மாணவர்கள், தங்களின் எதிர்காலத்துக்கு உகந்த, உயர்கல்வியை தேர்வு செய்ய வேண்டும். அனைத்து அரசுப்பள்ளிகளிலும், அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டி ஆலோசனை வழங்கப்படுகிறது. திருப்பூரில், 95 அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் இத்திட்டம் உள்ளது. ஆண்டு தோறும் பள்ளிக்கல்வி முடிக்கும் மாணவ, மாணவியரில், எத்தனை பேர் கல்லுாரி கல்விக்குள் நுழைகின்றனர் என்பதை அரசு உறுதிப்படுத்துகிறது; கண்காணிக்கிறது.அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில், கடந்த கல்வியாண்டில், பிளஸ் 2 முடித்தவர்களில், 98 சதவீதம் பேர் கல்லுாரி சென்றனர்; மாநில அளவில் இது ஒரு சாதனை. உயர்கல்வி வழிகாட்டுதலில் கலெக்டர் கூடுதல் கவனம் செலுத்துகிறார். ஏராளமான ஏஜன்சிகள், வியாபார நோக்கில் மாணவர்களை மூளைச்சலவை செய்து கல்லுாரிகளில் சேர்க்க முற்படலாம்; ஏமாந்து விடக் கூடாது. பெற்றோர், ஆசிரியர் வழிகாட்டுதலில் உயர்கல்வியை தேர்வு செய்யலாம். - சுரேஷ்குமார், திருப்பூர் மாவட்ட 'நீட்' ஒருங்கிணைப்பாளர்