மேலும் செய்திகள்
விகாஸ் வித்யாலயா பள்ளி மாணவியருக்கு பாராட்டு
03-Jun-2025
திருப்பூர் : இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான தரவரிசையில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேர், முதல் பத்து இடங்களுக்குள் வந்து, சாதித்துள்ளனர்.அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில், 1.7 லட்சத்துக்கு அதிகமான இடங்கள் உள்ளன. பொதுப்பிரிவு கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி பெற்ற 2.41 லட்சம் பேருக்கான, தரவரிசை பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் முதல் பத்து இடங்களில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நான்கு மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். தாராபுரம், விவேகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் கிருஷ்ணபிரியன் நான்காமிடம்; அம்மாபாளையம், ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளி மாணவர் விஷால்ராம் ஏழாமிடம்; காங்கயம், சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளி மாணவி சுபஸ்ரீ, ஒன்பதாம் இடம்; திருப்பூர், கூலிபாளையம், விகாஸ் வித்யாலயா பள்ளி மாணவி கோதை காமாட்சி பத்தாமிடம் பெற்றுள்ளனர்.செயலில் அர்ப்பணிப்பு; கவனம் சிதறாமை என கருத்துான்றிப் படித்ததால் இந்தச் சாதனையை மேற்கொள்ள முடிந்ததாக இவர்கள் தெரிவித்தனர்.
அன்றாட படிப்புகளை அன்றே படித்து முடித்து விடுவேன்; தேர்வுக்கு ஆறு மாதம் முன்பே தயாரானேன். பிளஸ் 2 பொதுத்தேர்வில், 598 மதிப்பெண் பெற்று, மாநிலத்தில் இரண்டாமிடம் பெற்றேன். கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் பாடங்களில் சென்டம் பெற்றேன். இன்ஜி., தரவரிசையில் நான்காமிடம் பெற்றது, மகிழ்ச்சியான தருணம்.பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பேருதவியாக இருந்தனர். மன அழுத்தமில்லாமல் படிக்க பெற்றோர் உறுதுணையாக இருந்தனர். பொறுப்பு உணர்ந்து படித்தேன்; நல்ல இடம் கிடைத்துள்ளது. அண்ணா பல்கலையில், பி.இ., கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிக்க ஆர்வமாக உள்ளேன்.- கிருஷ்ணபிரியன்
அன்றாட படிப்புகளை அன்றே படித்து முடித்து விடுவேன்; தேர்வுக்கு ஆறு மாதம் முன்பே தயாரானேன். பிளஸ் 2 பொதுத்தேர்வில், 598 மதிப்பெண் பெற்று, மாநிலத்தில் இரண்டாமிடம் பெற்றேன். கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் பாடங்களில் சென்டம் பெற்றேன். இன்ஜி., தரவரிசையில் நான்காமிடம் பெற்றது, மகிழ்ச்சியான தருணம்.பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பேருதவியாக இருந்தனர். மன அழுத்தமில்லாமல் படிக்க பெற்றோர் உறுதுணையாக இருந்தனர். பொறுப்பு உணர்ந்து படித்தேன்; நல்ல இடம் கிடைத்துள்ளது. அண்ணா பல்கலையில், பி.இ., கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிக்க ஆர்வமாக உள்ளேன்.- கிருஷ்ணபிரியன்நேரம் பொன் போன்றதுபிளஸ் 2 வகுப்பில், 597 மதிப்பெண் பெற்றேன்; பள்ளியில் முதல் மாணவன். இயற்பியல், வேதியியல், கணிதம், கம்யூட்டர் சயின்ஸ் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளேன். தேவையற்ற விஷயங்களுக்கு நேரத்தை வீணடிக்காமல் படித்தாலே சாதிக்க முடியும். உயர்படிப்புக்கும் அதுவே உதவியாக இருக்கும்.- விஷால் ராம்
இயற்பியல், வேதியியல், கணிதம், கம்யூட்டர் சயின்ஸ் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண். தமிழ், 99, ஆங்கிலத்தில், 98. பிளஸ் 2வில், 597 மதிப்பெண். இயற்பியல், கணிதத்தில் ஆர்வம் அதிகம். இ.சி.இ., படிப்பை தேர்வு செய்துள்ளேன். சிறந்த நிறுவனம் ஒன்றில், மெச்சத்தகுந்த பணியில் அமர வேண்டும் என்பதே என் லட்சியம்.- சுபஸ்ரீ
03-Jun-2025