மேலும் செய்திகள்
தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி
11-Sep-2025
தி ருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரியில் கடந்த, 10ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு போஸ்டர் தயாரிப்பு போட்டி நடத்தப்பட்டது. அதில் தற்கொலைக்கு எதிராக, கண் கவரும் ஓவியங்களாலும், அழகிய வாசகங்களாலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மருத்துவ கல்லுாரி மாணவர்கள் போஸ்டர்களை உருவாக்கி இருந்தனர். 'தற்கொலை விடையல்ல, அழிவு, எதிர்காலத்தை துாக்கிலிடா தீர்கள், இன்றே முடிந்துவிட்டால் நாளைய காவியம் இயற்றப்படாது, சரியில்லாமலிருப்பதும் சரிதான், தற்கொலை வலியைக் கொல்லாது. மற்றவருக்கு வலியைக் கொடுக்கும், கொல்லுங்கள், உங்களையல்ல பிரச்னைகளை, தப்பிக்கும் வழி தற்கொலையல்ல...' போன்ற விழிப்புணர்வு வாக்கியங்கள் போஸ்டரில் இடம்பெற்றன. இதுமட்டுமல்லாமல் தத்ரூபமான ஓவியங்கள், தற்கொலை தடுப்பு வழிமுறைகள், நம்பிக்கையூட்டும் வார்த்தைகள், தற்கொலைக்கு எதிரான ஆலோசனை எண்கள், சட்டங்கள் போன்ற பலவும் போஸ்டர்களில் இடம் பெற்றன. மாணவர்களின் படைப்புகளைக் கண்ட பேராசிரியர்கள் அவர்களைப் பாராட்டினர். மேலும் தற்கொலை எண்ணம் கொண்டவாறு யாரேனும் இருக்கும்படி அறிந்தால், அவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
11-Sep-2025