உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் திருப்பணிகள் துவங்கியது

சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் திருப்பணிகள் துவங்கியது

அவிநாசி; அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள சுந்தரமூர்த்தி நாயனார் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி வேலைகளுக்காக, சிதிலமடைந்த மண்டபங்கள், கோவில் பிரகாரங்கள் இடிக்கும் பணி துவங்கியது. கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து பல ஆண்டுகளான நிலையில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து சுவர்களில் விரிசல் மற்றும் மண்டபங்களில் உள்ள துாண்கள் இடிந்து விழும் நிலையிலும் காணப்பட்டது. இதனால், கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் மேற்கொள்ள கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்ததால், திருப்பணிகள் துவங்கின. நேற்று பூர்வாங்கப் பணியாக சிதிலமடைந்த மண்டபம் மற்றும் கோவில் பிரகாரம் ஆகியன பொக்லைன் வாயிலாக இடிக்கும் பணி துவங்கியது. கோவில் செயல் அலுவலர் சபரீஷ்குமார் கண்காணிப்பில் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை