உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அங்கன்வாடி மையங்களுக்கு  தளவாட பொருட்கள் வழங்கல் 

அங்கன்வாடி மையங்களுக்கு  தளவாட பொருட்கள் வழங்கல் 

உடுமலை : விருகல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அங்கன்வாடி மையங்களுக்கு, தன்னார்வ குழுவினர் சார்பில், தளவாட பொருட்கள் வழங்கப்பட்டன.குடிமங்கலம் ஒன்றியம், விருகல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட, அங்கன்வாடி மையங்களுக்கு, பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரி முன்னாள் மாணவர்கள் மற்றும் கிராம தன்னார்வலர்கள் குழு சார்பில், தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.ஏற்கனவே, இக்குழுவினர் சார்பில் பள்ளிகளுக்கு மின்விசிறி, குக்கர் மற்றும் தட்டுகள் வழங்கப்பட்டது. தற்போது அங்கன்வாடி மையங்களில் படிக்கும் குழந்தைகளுக்காக சேர் உள்ளிட்ட தளவாட பொருட்கள் தரப்பட்டுள்ளது.மேலும், தீபாவளி பண்டிகையையொட்டி, குழு ஒருங்கிணைப்பாளர் சார்பில், குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. கிராம மக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !