உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  நீச்சல் குளமாகும் மைதானம் விளையாட்டு வீரர்கள் பாதிப்பு

 நீச்சல் குளமாகும் மைதானம் விளையாட்டு வீரர்கள் பாதிப்பு

உடுமலை: நேதாஜி மைதானத்தில் மழை நீரை வெளியேற்ற, வடிகால் அமைப்பை துார்வாரி முறையாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. உடுமலை நகரின் மத்தியில், 6.30 ஏக்கர் பரப்பளவில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான நேதாஜி மைதானம் அமைந்துள்ளது. இம்மைதானத்தை நடைபயிற்சி செய்வோர், கிரிக்கெட், ஹாக்கி, புட்பால், கூடைப்பந்து மற்றும் தடகள போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள், அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். இம்மைதானத்தின் ஒரு பகுதியில், மழை நீர் வெளியேற வழியில்லாமல், தேங்குவது தொடர்கதையாக உள்ளது. கழிப்பிடம், ஸ்கேட்டிங் மைதானம் அமைந்துள்ள அப்பகுதியில், முன்பு மழை நீர் வெளியேற வடிகால் அமைக்கப்பட்டிருந்தது. முறையான பராமரிப்பு இல்லாமல், வடிகால் அடைபட்டு இருந்த இடம் தெரியாத அளவுக்கு சென்றுள்ளது. இதனால், மழைக்காலத்தில், பல அடி துாரத்துக்கு மழை நீர் தேங்கி, பல நாட்கள் வீரர்கள் மைதானத்தை பயன்படுத்த முடிவதில்லை. கொசு உற்பத்தியும் அதிகரித்து நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. நீச்சல் குளம் போல் பல நாட்களுக்கு தண்ணீர் வடியாமல் தேங்கி விடுகிறது. வடிகால் அமைப்பை முறையாக ஏற்படுத்தி மழைநீரை வெளியேற்றி, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என, விளையாட்டு ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை