உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரயிலுக்கு குடையோட போகணும்; போதிய நிழற்கூரை வசதி இல்லை

ரயிலுக்கு குடையோட போகணும்; போதிய நிழற்கூரை வசதி இல்லை

உடுமலை : புதுப்பிக்கப்பட்ட ரயில்வே ஸ்டேஷன் பயன்பாட்டுக்கு வந்து பல ஆண்டுகளாகியும், மேற்கூரை இல்லாததால், உடுமலை பயணியர் குடையுடன் செல்வது கட்டாயமாகியுள்ளது.உடுமலை ரயில்வே ஸ்டேஷன், பாலக்காடு - திண்டுக்கல் அகல ரயில்வே பாதை பணிகளின் போது புதுப்பிக்கப்பட்டது. தற்போது ரயில் சேவை பல மடங்கு அதிகரிக்கப்பட்டாலும், ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை.குறிப்பாக, ப்ளாட்பார்ம்களில் போதியளவு நிழற்கூரை இல்லை. இதனால், மழைக்காலத்தில், பயணியர் மிகுந்த சிரமப்படுகின்றனர். மாற்றுத்திறனாளிகள் அதிகளவு பாதிக்கின்றனர்.குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும், சிறிய அளவில் இருக்கும் நிழற்கூரையில் காத்திருந்து, ரயில் வந்ததும், சம்பந்தப்பட்ட பெட்டிக்கு ஓடிப்போய் ஏற வேண்டிய நிலை உள்ளது.இதனால், உடுமலை ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் பயணியர் குடையை மறக்காமல் எடுத்துச்செல்ல வேண்டியுள்ளது. மேலும், வாகன நிறுத்துமிடத்திலும் மேற்கூரை இல்லை. கழிப்பிட வசதியும் இல்லை.உடுமலை ரயில்வே ஸ்டேஷன் வாயிலாக, கணிசமான வருவாய் ரயில்வேக்கு கிடைத்தும், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது பயணியரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை