உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டீ அவென்யூஸ் அண்ட் கார்டன்ஸ் அனைத்து வசதிகளுடன் வீடுகள்

டீ அவென்யூஸ் அண்ட் கார்டன்ஸ் அனைத்து வசதிகளுடன் வீடுகள்

திருப்பூர்: திருப்பூர், காங்கயம் ரோட்டிலுள்ள படியூர் - பாலசமுத்திரம் புதுாரில், 'டீ அவென்யூஸ் அண்ட் கார்டன்ஸ்', 12 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டுமனை மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய வீடுகள் விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.அதன் பங்குதாரர் சிலீக் ராமசாமி - சுசீலா தம்பதியர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். பண்டிட் பாலசுப்ரமணியம், நந்தி போர்வெல்ஸ் தங்கவேல் மற்றும் பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.'டீ அவென்யூ' நிர்வாகிகள் கூறியதாவது:'டீ அவென்யூ' சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. விசாலமான சாலைகள், இருபுறமும் மரக்கன்றுகள் நடக்கப்பட்டு இயற்கையான சீதோஷ்ண நிலையில் அமைந்துள்ளது. 'டிடிசிபி' அனுமதி பெற்ற வீட்டு மனைகள், ஒரு சென்ட் ஆரம்பகட்ட விலை, 3.60 லட்சம் ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. வீடுகள், 85 சதவீத வங்கி கடன் வசதியுடன் கட்டித் தரப்படுகிறது.இரண்டு படுக்கை அறையுடன் கூடிய வீடு குறைந்தபட்சம், 33 லட்சம் ரூபாய்க்கும், மூன்று படுக்கை வசதியுடன் கூடிய வீடு குறைந்தபட்சம், 39 லட்சம் ரூபாய் முதல் கட்டி தரப்படுகிறது.வீடு, வீட்டு மனை விற்பனைக்கான முன்பதிவு துவங்கி உள்ளது. மேலும் விபரங்களுக்கு, 82482 61464 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி