வாலிபர்கள் மோதல்
திருப்பூர்; திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஒரு ஓட்டலில் வட மாநில வாலிபர்கள் சிலர் பணியாற்றுகின்றனர். நேற்று முன்தினம் தீபாவளி முன்னிட்டு ஓட்டல் விடுமுறை. அன்று இரவு அதே பகுதியில் உள்ள ஒரு பாரில் மது அருந்தச் சென்றனர். அங்கு ஏற்கனவே திருப்பூர் பகுதியைச் சேர்ந்த ஏழு வாலிபர்கள் ஒரு குழுவாக மது அருந்திக் கொண்டிருந்தனர்.ஓட்டல் ஊழியர்கள் தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லிய போது, இரு தரப்பிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இது கைகலப்பாக மாறியது. இரு தரப்பினரும் பார்க்கு வெளியே வந்து நடுரோட்டில் மது போதையில் கடுமையாக மோதிக் கொண்டனர். போலீஸ் வந்ததால் தப்பியோடினர்.இது குறித்து தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.