உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கதை சொல்லுங்கள் கற்பனை சிறகடிக்கும்

கதை சொல்லுங்கள் கற்பனை சிறகடிக்கும்

துவக்கப்பள்ளிக்குள் நுழையும் குழந்தைகளுக்கு, ஆசிரியர்களுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்துவது கதை தான். கதை சொல்வதன் வாயிலாக, மாணவர் - ஆசிரியர் உறவு மேம்படுகிறது. இருவருக்குமான அன்பின் சங்கிலி என்றும் கூட சொல்லலாம்.'குழந்தைகளை துாங்க வைப்பதற்காக தான் கதை சொல்வது வழக்கம்' என்ற அந்தக்கால சிந்தனையை கடந்து தற்போது, குழந்தைகள், தங்களின் எதிர்கால கனவை கூட கதையாக வடித்துக் கூறுகின்றனர். தாங்கள் எதிர்காலத்தில் என்னவாக வர வேண்டும் என்பதைக் கூட, தங்கள் கதைகளின் வாயிலாக, குழந்தைகள் வெளிப்படுத்தி விடுகின்றனர்.தன் ஆசிரியர்களிடம் ஒரு குழந்தையின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது என்பதைக் கூட, அவர்கள் சொல்லும் கதை வாயிலாக அறிந்துகொள்ள முடியும். இதன் மூலம், அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை கூட, ஒரு ஆசிரியர்களால் தீர்மானித்து விட முடியும்.அவர்கள் வீடுகளில் இருந்து வரும் போதும் - போகும் போதும், தாங்கள் பார்த்தவற்றை, கேட்டவற்றை குட்டிக்கதைகளாக உருவகப்படுத்தி சொல்லும் போது, அவர்களின் கற்பனையாற்றல், படைப்பாற்றல் மேம்படுவதை உணர முடிகிறது.-சுசீலா, ஆசிரியை,ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி,ராக்கியாபாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி